ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் 108 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
மே தினத்தை முன்னிட்டு பிரான்சில் ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளதுடன், போராட்டக்காரர்களை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 291 பேர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.