Tuesday, December 23, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிகிச்சை பெற்று வந்த இளைஞன் கொலை: தம்பதியினர் கைது

சிகிச்சை பெற்று வந்த இளைஞன் கொலை: தம்பதியினர் கைது

அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாதவச்சி பிரதேசத்தைச் 27 வயது கணவனும், 23 வயதான அவரது மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் தொடர்பாக மேலும் மூவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மோதலொன்றின்போது பலத்த காயமடைந்து அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேற்படி இளைஞர் கடந்த 28ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles