Thursday, May 29, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொவிட் பரவல் குறித்து எச்சரிக்கை

கொவிட் பரவல் குறித்து எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அடையாளம் காணப்படுவது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

அண்மைய நாட்களில் நாளாந்தம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில் தினமும் சுமார் 05 கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தவிர, கடந்த 03 நாட்களில் கொவிட்-19 தொற்று காரணமாக 02 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு, கொவிட்-19 தொற்றினால் இலகுவாக பாதிக்கப்படக்கூடிய நபர்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles