Sunday, July 20, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஐமசவுக்கு எதிராக டயனா நீதிமன்றுக்கு

ஐமசவுக்கு எதிராக டயனா நீதிமன்றுக்கு

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சமர்ப்பித்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க எடுத்த தீர்மானத்தை ரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி டயனா கமகே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று (02) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதுஇ ​​இந்த மனுவை ஜூன் 8ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தி பிரதிவாதிகள் தம்மை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முயற்சித்ததாகவும், அந்த தீர்மானத்தை எட்டுவதற்கு முன்னர் பிரதிவாதிகள் நியாயமான ஒழுக்காற்று விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles