Wednesday, November 20, 2024
25.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாதாம்

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாதாம்

நேற்றைய பெற்றோல் விலை திருத்தமானது, முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பதற்கு போதுமானதல்ல என தேசிய கூட்டு முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

லங்கா பெற்றோல் 92 ஒக்டேன் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டது. இது எந்த வகையிலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் தாக்கம் செலுத்தாது என சங்கத்தின் செயலாளர் ரோஹன பெரேரா தெரிவித்துள்ளார்.

ஒரு முச்சக்கர வாகனம் லீற்றருக்கு 25 கிலோமீற்றர் தூரம் ஓடுகிறது. தற்போதைய விலை குறைப்பினால் ஒரு கிலோமீற்றருக்கான எரிபொருள் செலவு 28 சதங்களால் மட்டுமே குறைந்துள்ளது. எனவே, இந்த கட்டண திருத்தம் போதுமானதல்ல.

பெட்ரோல் விலை மாற்றத்தை பயன்படுத்தி தற்போது கட்டண திருத்தம் செய்ய முடியாது. வாழ்க்கைச் செலவு குறைவதோடு, முச்சக்கர வண்டி உதிரி பாகங்கள் மற்றும் ஏனைய எண்ணெய் விலையும் குறைவடைந்தால் மாத்திரமே கட்டண குறைப்பு தொடர்பில் கருத்திற்கொள்ள முடியும்.

வாராந்திர ஒதுக்கீட்டின் அடிப்படையில் எட்டு லீற்றர் பெற்றோல் வழங்கப்படுகிறது. மீதமுள்ள நாட்களுக்காக பல்வேறு சட்டவிரோத வழிகளில் போதுமான எரிபொருளைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பெற்றோல் பெறுவதில் நாங்கள் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்கிறோம். எனவே தற்போது முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாது எனவும் பெரேரா தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles