அதிகளவான இன்சுலினை செலுத்தி தனது மனைவியை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவர் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 05, லயர்ட்ஸ் வீதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நோய் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
குறித்த பெண்ணை பரிசோதித்த வைத்தியர்கள் அதிகளவு இன்சுலின் உட்கொண்டதன் காரணமாகவே இந்த பெண் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன்படி, மேலதிக விசாரணையில், பெண்ணின் கணவரான வைத்தியர் அதிகளவு இன்சுலினை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கியமை தெரியவந்ததையடுத்து, அவரது கணவர் நேற்று பம்பலப்பிட்டி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 05, லயர்ட்ஸ் வீதியை வசிப்பிடமாக கொண்ட 33 வயதுடையவர் எனவும் அவர் திருகோணமலை அரச வைத்தியசாலையில் வைத்தியர் எனவும் தெரியவந்துள்ளது.