கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதன்படி, வினாத்தாள் திருத்த பணிகளுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் மே 2 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம்.
இதற்கு முன்னர் விண்ணப்பிக்காத ஆசிரியர்களும், 2022 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு பின்னர் ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சமர்ப்பிக்கலாம்.