பிரித்தானியாவில் அரச மருத்துவமனை செவிலியா் அடுத்த வாரம் நடத்துவதாக இருந்த போராட்டம் சட்டவிரோதமானது என்று உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஊதிய உயா்வு, சாதகமான பணிச் சூழல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல மாதங்களாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசுத் துறை செவிலியா்கள், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி முதல் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனா்.
இந்தப் போராட்டத்தில் முதல்முறையாக அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் செவிலியரும் பங்கேற்பதாக இருந்தது.
இந்த நிலையில், செவிலியா் போராட்டம் சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது.