Saturday, November 1, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிகிரியா படிகளை சீரமைக்க 4 கோடி ரூபா நிதி உதவி

சிகிரியா படிகளை சீரமைக்க 4 கோடி ரூபா நிதி உதவி

சிகிரியா ஓவிய குகைக்கு செல்லும் படிகளை சீரமைக்க 04 கோடி ரூபா நிதியுதவி வழங்க யுனெஸ்கோ தீர்மானித்துள்ளது.

இந்த நிதி அடுத்த மாதமளவில் கிடைக்குமென மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. அதனூடாக தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படும் படிக்கட்டுகள் விரைவில் புனரமைக்கப்படும் என மத்திய கலாசார நிதியம் குறிப்பிடுகின்றது.

இதேவேளை, சிகிரியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விசேட திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்கும் கட்டண முறைமையை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles