Tuesday, December 23, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் எரிபொருள் விற்பனைக்கு தயாராகும் யுனைடெட் பெற்றோலிய நிறுவனம்

இலங்கையில் எரிபொருள் விற்பனைக்கு தயாராகும் யுனைடெட் பெற்றோலிய நிறுவனம்

இலங்கையின் எரிபொருள் சில்லறை சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக, அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலிய நிறுவனத்துடன், இணையவழி பேச்சுவார்த்தையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நிறைவு செய்துள்ளதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எரிபொருள் விற்பனை உடன்படிக்கைகள், அரசாங்கக் கொள்கைகள், தளவாடங்கள் மற்றும் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான காலக்கெடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

யுனைடெட் பெற்றோலியம் அடுத்த வாரத்தில் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் திகதிகளை தெரிவிக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, முதலீட்டுச் சபை ,இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) ஆகியவற்றின் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles