நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பி பி ஜயசுந்தரவே, அனைத்து அரசியல் தலைவர்களின் நெறியாள்கையிலும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியவர் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
அத்துடன் பொருளாதார நெருக்கடிக்கு நாடாளுமன்றமும் பொறுப்புக் கூற வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் அவதானம் செலுத்தவேண்டிய பிரதான தரப்பாக நாடாளுமன்றம் செயற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கையில் நாடாளுமன்றம் ஏனைய எளிமையான விடயங்களில் கவனத்தை செலுத்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பிபி ஜயசுந்தரவை பொருளாதார கொலைக்காரன் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.