தேசிய லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றிய போது, வாகனங்களை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி விசாரணை நடத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இந்த வழக்கை விசாரிப்பதற்கான திகதியை நிர்ணயிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
2006 ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றிய போது வாடகை அடிப்படையில் பெறப்பட்ட மூன்று வாகனங்களை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.