Tuesday, May 13, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் மாடி வாகன தரிப்பிடங்களை அமைக்க நடவடிக்கை

கொழும்பில் மாடி வாகன தரிப்பிடங்களை அமைக்க நடவடிக்கை

நாளாந்தம் கொழும்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கொழும்பில் நான்கு பல மாடி வாகன தரிப்பிடங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தரவுக்கமைய நகர அபிவிருத்தி அதிகாரசபையால் (UDA) இந்த வாகன நிறுத்துமிடங்கள் தனியார் மற்றும் அரச துறைகளின் ஆதரவுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மாடி வாகன நிறுத்துமிடங்களில் இரண்டு UDA வினால் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், ஏனைய இரண்டு வாகன நிறுத்துமிடங்களும் தனியார் துறையினரால் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு முன்னால், பழைய மீன் சந்தை மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய இடங்களில் இந்த வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles