Wednesday, December 17, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளுத்துறையில் பெண்ணொருவர் கொடூர கொலை

களுத்துறையில் பெண்ணொருவர் கொடூர கொலை

களுத்துறை வடக்கில் வீடொன்றின் பின்புறம் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு பிள்ளைகளின் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை வடக்கு கலிடோ வீதியை வசிப்பிடமாகக் கொண்ட பிரேமாவதி என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (27) காலை வீட்டின் பின்புறம் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண் கிடப்பதைப் பார்த்த அவரது மகள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரத்தக்கறை படிந்த மன்னா கத்தி மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில், அவரது மகள் வீட்டில் உள்ள சமையல் அறையில் மீன் வெட்டுவதற்காக குறித்த கத்தி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

களுத்துறை குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் மற்றும் பல விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles