கடந்த வருடத்தை விட இந்த வருடம் கடந்த சில மாதங்களில் காட்டு யானைகளின் மரணம் அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் மனித செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 143 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த யானைகளின் மரணங்களில் 37 மரணங்கள் துப்பாக்கிச் சூடு காரணமாகவும், 27 மரணங்கள் மின்சாரம் தாக்கியதாலும், 06 மரணங்கள் விலங்கு வேட்டைக்காக வைக்கபபட்டிருந்த வெடிபொருட்களாலும் ஏற்பட்டுள்ளன.
காட்டு யானைகளின் தாக்குதலினால் இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.