Tuesday, December 23, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2022 ஐ விட மோசமான நெருக்கடி 2026 இல் காத்திருக்கிறது - உதய கம்மன்பில

2022 ஐ விட மோசமான நெருக்கடி 2026 இல் காத்திருக்கிறது – உதய கம்மன்பில

2022ஆம் ஆண்டை விட மோசமான நெருக்கடி 2026இல் ஏற்படும் என எச்சரிப்பதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த இந்த அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், 2026இல் இந்த கடன் என்ற குண்டு வெடிக்கும் எனவும் கம்மன்பில பாராளுமன்றில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “இந்த விவாதம் முழுமையடையாது. விவாதத்திற்கு தேவையான முழுமையான ஆவணங்களை பாராளுமன்றில் சமர்ப்பிக்காமல் விவாதம் இடம்பெறுகிறது. சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றது ரூபா இல்லாமல் அல்ல டொலர் இல்லாமலேயே என்பதை உணர வேண்டும். இந்த ஒப்பந்தங்களில் இருப்பது ரூபாவிற்கான தீர்வுதான். டொலருக்கான தீர்வு இதில் இல்லை” என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles