Monday, April 13, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் மோதி 15 வயது சிறுமி பலி

ரயில் மோதி 15 வயது சிறுமி பலி

மாத்தறை – பம்புரன தொடருந்து நிலையத்துக்கு அருகில் சிறுமியொருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலிலேயே நேற்று மாலை குறித்த சிறுமி மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

ஹீன்தெடிய தர்மராஜ வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் பயின்றுவந்த, ஹீன்தெடிய – பென்தொடகேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான மாணவியொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் தனது நண்பிகள் மூவருடன், விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், தண்டவாளம் வழியாக நடந்துசென்றபோது, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles