இலங்கை கடற்பரப்பில் தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் நாட்டில் பாரிய பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் இலங்கைக்கு 6 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நட்டயீட்டை பெற்றுக்கொள்ளக்கூடிய சட்ட அதிகாரம் இருந்தது.
எனினும் அதற்கான முன்னெடுப்புகளை தடுப்பதற்காக இலங்கை அதிகாரி ஒருவருக்கு 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய, சாமர குணசேகர என்பவரே குறித்த நிறுவனத்திடம் மேற்படி தொகையை இலஞ்சமாக பெற்றுக் கொண்டதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.