வருடாந்த தொழில் ஒதுக்கீடுகளுக்கு அப்பால் இலங்கையர்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகளை வழங்க தென் கொரியா இணக்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு தென் கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கு 8000 தொழில் வாய்ப்புகளை வழங்க இலங்கையை தளமாகக் கொண்ட தென் கொரிய மனிதவளத் திணைக்களத்தின் பணிப்பாளர் இணக்கம் வெளியிட்டுள்ளார்.
இது முன்னர் ஒதுக்கப்பட்ட 6500 தொழில் ஒதுக்கீட்டினை விட அதிகளவாகும்.
இவர்களில் கொரிய மொழித் திறன் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற 600 பேர் கப்பல் நிர்மாணத் துறைக்கு பணிக்கு பரிந்துரைக்கப்படவுள்ளனர்.
மேலதிகமாக அடுத்த ஆண்டு முதல் கப்பல் நிர்மாணத் துறையில் வேலைகளுக்காக E9 விசா பிரிவின் கீழ் 900 வெல்டர்கள் மற்றும் பெயிண்டர்களை பணியமர்த்தவும் தென் கொரிய மனித வளத்துறை ஒப்புக் கொண்டுள்ளது.
Facebook