Sunday, August 10, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் எரிபொருள் விற்பனைக்கு தயாராகும் சினொபெக் நிறுவனம்

இலங்கையில் எரிபொருள் விற்பனைக்கு தயாராகும் சினொபெக் நிறுவனம்

இலங்கையில் சில்லறை எரிபொருள் விற்பனைக்கான உடன்படிக்கை மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சினோபெக் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

இந்தக் குழுவில் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவும் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

குழுவுக்கும் அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று அமைச்சில் இடம்பெற்றது.

அங்கு ஒப்பந்தம் தொடர்பான அட்டவணைகள், ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் அது தொடர்பான பிற விஷயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் மே மாதம் இது தொடர்பான உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டு 45 நாட்களுக்குள் விற்பனை நடவடிக்கைகளை ஆரம்பிக்க இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles