Tuesday, December 23, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிக விலை மதிப்புடைய வலம்புரியை விற்க முயன்றவர் சிக்கினார்

அதிக விலை மதிப்புடைய வலம்புரியை விற்க முயன்றவர் சிக்கினார்

அதிக விலை மதிப்புடைய வலம்புரியை மிகவும் சூட்சுமமான முறையில் விற்பனை செய்ய முயன்ற நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படை நுவரெலியா முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சந்தேகநபர் அம்பேவெல வீதியில் கொரகபதான, பொரகஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட போது, ​​சந்தேகநபர் ட்ரைடன் ரக வலம்புரியை 5 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles