Tuesday, July 29, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஷாஃப்டர் மரணம்: பிரையன் தோமஸின் டிஎன்ஏ அறிக்கையை பெறுமாறு உத்தரவு

ஷாஃப்டர் மரணம்: பிரையன் தோமஸின் டிஎன்ஏ அறிக்கையை பெறுமாறு உத்தரவு

ஜனசக்தி இன்சூரன்ஸ் குழுமத்தின் பணிப்பாளரான கோடீஸ்வர வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் சிரேஷ்ட கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸின் மரபணு பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, அரச இரசாயனப் பகுப்பாய்வகத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஷாஃப்டரின் மரணம் தொடர்பான வழக்கு நேற்று (24) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவரடங்கிய நிபுணர் குழுவின் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தினேஷ் ஷாஃப்டரின் மகிழுந்தில் காணப்பட்ட பிறிதொரு நபரின் இரத்த மாதிரியின் அடையாளத்தை உறுதிப்படுத்த இந்த மரபணு பரிசோதனைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles