Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவருமான வரியை குறைக்க முடியாது - பந்துல குணவர்தன

வருமான வரியை குறைக்க முடியாது – பந்துல குணவர்தன

வருமான வரியை குறைக்குமாறு எவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவற்றை நிறைவேற்ற முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் ஈடுபடும் போது கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டிய நிபந்தனையொன்று உள்ளதாகவும், வரியை நினைத்தவாறு படிப்படியாக குறைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles