Wednesday, July 30, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை இறக்குமதி குறித்து தீர்மானிக்க குழு

முட்டை இறக்குமதி குறித்து தீர்மானிக்க குழு

முட்டை இறக்குமதி செய்வது தொடர்பிலான தீர்மானங்களை எடுப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில் விவசாய அமைச்சின் செயலாளர், வர்த்தக அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சரவை செயலாளர் ஆகியோர் அடங்குவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இதுவரை 05 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மேலும் 02 மில்லியன் முட்டைகள் கொழும்பு துறைமுகத்தில் உள்ளதாக அமைச்சர் கூறினார்.

அவற்றை விடுவிப்பதற்கு தேவையான அறிக்கை நேற்று(24) வரை கிடைக்கவில்லை என வர்த்தக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles