பலாங்கொட -கொடகும்புர பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (24) மாலை மின்னல் தாக்கி 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இளைஞன் வீட்டில் இருந்த போது மின்னல் தாக்கி பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.