Saturday, November 1, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசூட்சுமமான முறையில் அனுப்பப்பட்ட 84 மில்லியன் ரூபா மதிப்புடைய குஷ் மீட்பு

சூட்சுமமான முறையில் அனுப்பப்பட்ட 84 மில்லியன் ரூபா மதிப்புடைய குஷ் மீட்பு

கனடாவில் வசிக்கும் ஒருவரால் இலங்கையில் உள்ள ஒருவருக்கு அனுப்பப்பட்ட சுமார் 12 கிலோகிராம் எடையுள்ள குஷ் போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பேலியகொட பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் சரக்கு நிறுவனம் ஒன்றின் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொருட்கள் அடங்கிய இரண்டு மரப்பெட்டிகளில் மிகவும் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் வசிக்கும் ஒருவர் பொருட்கள் அடங்கிய இரண்டு மரப்பெட்டிகளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மற்றொரு தமிழருக்கு அனுப்பியுள்ளார்.

இவ்வாறு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள் அடங்கிய இரண்டு மரப்பெட்டிகளை பெறுவதற்கு பொருட்களின் உரிமையாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருளுடன் குறித்த நபரையும் சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 84 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles