கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் அரச வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
வருடத்தின் முதல் காலாண்டில் அரசாங்கத்தின் வரி வருமானம் 316.6 பில்லியன் ரூபா என திணைக்களத்தின் தரவு அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த வருடத்தின் முதல் காலாண்டில் அரசாங்கத்தின் வரி வருமானம் 146.5 பில்லியன் ரூபாவாக இருந்தது.
இது கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 116மூ வளர்ச்சியாகும்.
வரியின் கீழ் 25.5 பில்லியன் ரூபா வரி வருமானம் பெறப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் முதல் காலாண்டில் இது 4.6 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வரி வருமானத்தில் 447.2மூ அதிகரிப்பாகும்.