Thursday, May 29, 2025
27.5 C
Colombo
செய்திகள்உலகம்நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்

நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் இருந்து அரிசோனா மாகாணம் பினிக்ஸ் நகருக்கு அமெரிக்க எயார்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று (23) காலை புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் விமானத்தின் இயந்திரத்தில் இருந்து பயங்கரமாக தீ பற்றியுள்ளது.

நடுவானில் விமானத்தின் இயந்திரம் மீது பறவை மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தீ பற்றியது குறித்து அறிந்த விமானி உடனடியாக விமானத்தை ஒஹியோ விமான நிலையத்திலேயே அவசர அவசரமாக தரையிறக்கினார்.

பின்னர் உடனடியாக இயந்திரத்தில் பற்றிய தீ அணைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாற்று விமானம் மூலம் பயணிகள் பினிக்ஸ் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நடுவானில் விமான இயந்திரத்தில் தீ பற்றி எரிந்த நிகழ்வை தரையில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles