பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சட்டசபைத் தேர்தலை விரைவாக நடத்த அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தேர்தலை நடத்த பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசாங்கம் மறுத்து வருகின்றது.
இந்நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் பிரசாரத்தை இன்று முதல் தொடங்குவதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளார் ஆசாத் உமர் தனது ட்விட்டரில், ‘தெஹ்ரீக்-இ-இன்சாப் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று உத்தியோகபூர்வமாக தொடங்கவுள்ளது. பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் தயாராக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.