Tuesday, July 22, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதங்கம் - வைரம் திருடிய பெண் கைது

தங்கம் – வைரம் திருடிய பெண் கைது

மஹாபாகே பிரதேசத்தில் தங்கம் மற்றும் வைரம் திருட்டு தொடர்பில் தேடப்பட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

25 வயதுடைய குறித்த பெண், நேற்று (23) இரவு கொஸ்மோதர பொலிஸ் பிரிவில் கைதுசெய்யப்பட்டதுடன், அவர் வழங்கிய தகவலின் பிரகாரம் திருடப்பட்ட தங்கம் மற்றும் வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் அவர் தெனியாய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

11 பவுன் தங்கம், வைரம் உள்ளிட்ட 30 இலட்சம் ரூபா மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கடந்த 11ம் திகதி மஹாபாகே பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்தது.

அதற்கமைய, குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles