திருமணத்திற்கு புறம்பான உறவு காரணமாக கணவனை கொலை செய்ய ஒரு இலட்சம் ரூபாவுக்கு ஒப்பந்தம் வழங்கிய மனைவி ஒருவரை நேற்று (23) ஆனமடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர் தனது கணவரின் நெருங்கிய நண்பருடன் தொடர்பு வைத்திருந்தமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
அதன்படி, குறித்த நண்பர் உள்பட மேலும் 4 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் குறித்த நண்பர் மிரிஹான பிரதேசத்தை வசிப்பவர் என்றும், நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த குழுவினால் ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரின் மனைவி வெலிமடை பகுதியைச் சேர்ந்தவர்.
கணவருடன் சேர்ந்து வாழும் போது கணவரின் நண்பருடன் திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருந்தது பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த உறவு தனது கணவருக்கு தெரிந்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதான சந்தேக நபருடன் இணைந்து கொலைத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார்.
சந்தேக நபரின் மனைவி தனது பிள்ளைகளுடன் வெலிமடையில் வசிக்கும் பெற்றோரைப் பார்க்கச் சென்றிருந்த நிலையில், கணவனைக் கொலை செய்யத் திட்டமிடப்பட்டது.
அதன் பின்னர் குறித்த நபரை கொலை செய்ய கணவனின் நண்பன் ஊடாக, பணத்திற்காக கொலை செய்யும் கும்பலிடம் 1 இலட்சம் ரூபா பணம் தருவதாக கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான கணவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதன்போது மனைவி மற்றும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கழுத்தை அறுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள் மற்றும் கத்திகள் ஏரியொன்றில் இருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.