Thursday, March 26, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பல் தீக்கிரை: சிங்கப்பூர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பல் தீக்கிரை: சிங்கப்பூர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

இலங்கையின் கடல் எல்லைக்குள் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரப் பாதிப்புக்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி சிங்கப்பூர் நீதிமன்றில் இன்று வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள சட்ட நிறுவனமொன்றிடம் இந்த நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சிவில் வழக்குத் துறை இந்த வழக்கைக் கையாளுகிறது, மேலும் வழக்குக்கு ஆதரவாக நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த இழப்பீட்டு தொகை குறித்து எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் இது குறித்து கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையிடமிருந்து விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles