Thursday, March 26, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலை வாய்ப்புகள்

இலங்கையர்களுக்கு தென்கொரியாவில் அதிக வேலை வாய்ப்புகள்

இலங்கையின் வரலாற்றில் அதிகூடிய வேலைவாய்ப்புக்கான வெற்றிடங்கள் தென் கொரியாவிடமிருந்து கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இவ் வருடத்திற்கான அதிகளவான வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் தென் கொரியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

6,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதன் விளைவாக வாராந்தம் 200 இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக அனுப்பப்படுவார்கள் என்றும் கூறினார்.

தென் கொரியாவில் மீன்பிடித் துறையில் வேலை வாய்ப்புக்காக 109 இலங்கையர்கள் நேற்று புறப்பட்டனர்.

மேலும் 65 இலங்கையர்கள் நாளை புறப்பட உள்ளதுடன், 28 இலங்கையர்கள் நாளை மறுநாள் புறப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles