மத்திய வங்கியின் உயர் பாதுகாப்பிலிருந்து 50 இலட்சம் ரூபா காணாமல் போனமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி நேற்று (20) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், 2023.04.11 அன்று நாணயச் செயற்பாடுகளின் போது இலங்கை மத்திய வங்கியின் பெட்டகத்தில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 5,000 ரூபா நாணயத்தாள்கள் காணால் போனமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக உள்ளக ஆய்வுகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட அதேவேளை, கோட்டை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு, பொலிஸ் விசாரணைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த விடயத்தை முழுமையாக விசாரணை செய்வதற்கும் மற்றும் உள்ளகக் கட்டுப்பாடுகள், செயன்முறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் அவசியமான வழிமுறைகளை இலங்கை மத்திய வங்கி எடுத்து வருகின்றது.