திருமணமான சில மாதங்களின் பின்னர் கணவனை கைவிட்டு சிலாபத்திலுள்ள பெற்றோரின் வீட்டுக்குச் சென்ற யுவதியொருவரைஇ திருமணமான கணவர் உட்பட குழுவினர் கடத்திச் சென்றதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
18 வயதுடைய திருமணமான பெண் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடத்தல் சம்பவம் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், அதற்காக யுவதியின் கணவர் உட்பட ஐவர் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்ட யுவதி சிலாபம் பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் கல்வி பயிலும் வேளையில் மேலதிக வகுப்புகளில் கலந்து கொண்ட போது குறித்த இளைஞனை அறிந்து கொண்டுள்ளார்.
பின்னர் அந்த இளைஞனை இரகசியமாக திருமணம் செய்து பல மாதங்கள் அவருடன் வாழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் திருமணமான யுவதி கணவரின் தொல்லை தாங்க முடியாமல் கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியதாக கூறப்படுகிறது.
வீட்டில் தங்கியிருந்த போது, அவரது கணவர் மற்றும் சிலர் அவரை கடத்திச் சென்றதுடன்இ அப்போது அவரது தாய் மட்டும் வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.
வந்தவர்கள் தாயை தாக்கிவிட்டு குறித்த பெண்ணை இவ்வாறு கடத்திச் சென்றதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இச்சம்பவம் குறித்து சிலாபம் தலைமையக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.