Thursday, May 29, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவலம்புரி சங்குடன் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி கைது

வலம்புரி சங்குடன் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி கைது

விலையை நிர்ணயிக்க முடியாத வகையிலான வலம்புரிச் சங்கொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் விலங்கு தள உதவியாளர் ஒருவர் இன்று (21) கைது செய்யப்பட்டதாக மீரிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேபுஸ்ஸ அரச பண்ணைக்கு அருகில் கொடகலான-லோலுவாகொட பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வலம்புரி சங்கினை ஒருவர் பதுக்கி வைத்திருப்பதாக வெலிசர கடற்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மீரிகம பொலிஸ் நிலையத்தின் இரவு நேர நடமாடும் ரோந்து குழுவினர் மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வலம்புரிச் சங்கு வனஜீவராசி அதிகாரியிடம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles