வருமான வரி செலுத்துதல் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஆண்டின் மொத்த வருமானம் 1,200,000 ரூபாவுக்கு மேல் இருந்தால் வருமான வரி செலுத்த வேண்டும் என்று திணைக்களம் அந்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.
வணிக உரிமையாளர்கள், வாடகை அல்லது வட்டி தொடர்பான முதலீடுகளின் வருமானம் அல்லது குறிப்பிட்ட ஆண்டு வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பு ஆகியவை இதில் அடங்கும்.
வருமான வரி செலுத்துவதற்கான கணக்கினை திறப்பது தனி நபரின் பொறுப்பு எனக் கூறியுள்ள திணைக்களம், தங்களின் வருமான வரியினை உரிய நேரத்தில் செலுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.
வருமான வரி கணக்கினை www.ird.gov.lk என்ற இறைவரித் திணைக்களத்தின் இணையத்தளத்தினூடாக பிரவேசித்து திறக்க முடியும்.