Friday, September 12, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவன்புணர்வில் இருந்து தப்பிக்க முயன்ற பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்து மரணம்

வன்புணர்வில் இருந்து தப்பிக்க முயன்ற பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்து மரணம்

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பேருந்தில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய மரதன்கடவல பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி அவிசாவளை – கோட்டை பேருந்தில் பயணித்த இந்த பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அண்மையில் (18) உயிரிழந்துள்ளார்.

குடிபோதையில் பேருந்தில் ஏறிய ஒருவரால் பாலியல் வன்கொடுமையில் இருந்து விடுபட முற்பட்ட போதே பேருந்தில் இருந்து தவறி விழுந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட பலரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles