காஷ்மீர் – இமயமலைப் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் மேலும் பல இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடும் மழை மற்றும் பனிமூட்டமான காலநிலை நிலவிய நிலையில் இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை இலக்கு வைத்து குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இனந்தெரியாத பயங்கரவாத குழுவினால் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் இந்திய பாதுகாப்பு படையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.