பண்டாரகம மஹபெல்லான பகுதியில் நேற்று படகில் நண்பர்கள் குழுவுடன் நீராடச் சென்ற 16 வயதுடைய மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அலுபோமுல்ல மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் அலுபோமுல்ல மஹிந்த மாவத்தையைச் சேர்ந்த 16 வயதுடைய ஜனித நிர்மல என்ற மாணவனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவன் தனது பாடசாலையைச் சேர்ந்த நான்கு நண்பர்களுடன் நேற்று பிற்பகல் 3 மணியளவில் மஹபெல்லான பகுதியில் டகில் செல்வதற்காக வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்போது அவரது மூத்த சகோதரர் மற்றுமொரு நண்பருடன் வந்திருந்த நிலையில் அண்ணனின் நண்பரிடம் இருந்து சிறிது தூரம் நீச்சல் அடிக்கும்போது குறித்த மாணவன், அவரைப் பின்தொடர்ந்து படகிலிருந்து இறங்கி நீந்தி முன்னோக்கிச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். .
நீரில் மூழ்கி காணாமல் போன மாணவன் தொடர்பில் அலுபோமுல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பிரதேசவாசிகளின் உதவியுடன் படகு மூலம் மாணவனை தேடும் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
மீட்கப்பட்ட மாணவனை வேனில் ஏற்றி பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் மாணவன் உயிரிழந்துவிட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.