Friday, January 16, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிவனொளிபாத மலைக்கு சென்ற வயோதிப பெண் மரணம்

சிவனொளிபாத மலைக்கு சென்ற வயோதிப பெண் மரணம்

மொனராகலை பகுதியில் இருந்து நேற்று(20) சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த 69 வயது பெண்ணிற்கு நேற்று இரவு ஒரு மணி அளவில் ஊசி மலை பகுதியில் வைத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உறவினர்கள் இணைந்து நல்லதண்ணி நகருக்கு அழைத்து வந்து அவசர அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலம் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று பிரேத பரிசோதனையின் பின்னர் உடலம் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கபடவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles