இலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரொக்கெட்டான ஸ்டார்ஷிப் ரொக்கெட் தனது முதல் பயணத்திலேயே வெடித்து சிதறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (20) காலை, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பணியாளர்கள் இன்றி ரொக்கெட் ஏவப்பட்டது.
மூன்றே நிமிடங்களில் தரை மட்டத்தில் இருந்து 40 கிலோமீட்டர்கள் மேலே சென்ற ரொக்கெட் வெடித்து சிதறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இதற்கு தளராது முயற்சியை தனது நிறுவனம் தொடரும் என இலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.