ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குரங்குகளை சீன விலங்கு வளர்ப்பு நிறுவனமொன்றே கோரியுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இனப்பெருக்க நடவடிக்கைகளுக்காக குரங்குகளை குறித்த நிறுவனம் கேட்டுள்ளதாகவும், இது இன்னும் கோரிக்கை மட்டத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அந்த வகையில் எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் கருத்துகளை பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.