Saturday, July 26, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிக வெப்பம் காரணமாக மனநோய் ஏற்படும் அபாயம்

அதிக வெப்பம் காரணமாக மனநோய் ஏற்படும் அபாயம்

தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் மன உளைச்சல் உள்ளிட்ட மனநல நோய்கள் அதிகரிக்கலாம் என மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்தார்.

இதனால் மக்கள் வன்முறைக்கு உள்ளாக நேரிடும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக மக்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடலாம் என சுட்டிக்காட்டியுள்ள மனநல மருத்துவர் ரூமி ரூபன், இவ்விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

மனநோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்களுக்கு தாகம் குறைவதாகவும் அதனால் அவர்கள் நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதாகவும் மனநல மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிக வெப்பமான காலநிலை காரணமாக குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைவடையக்கூடும் எனவும் இதனால் பிள்ளைகளுக்கு கல்விச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலை மே இறுதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles