Wednesday, February 25, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுத்த இரு வாரங்களில் முட்டை விலை குறைக்கப்படும்

அடுத்த இரு வாரங்களில் முட்டை விலை குறைக்கப்படும்

யாரென்ன கூறினாலும் அடுத்த இரண்டு வாரங்களில் முட்டை விலை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஜா-அல கபுவத்த பிரதேசத்தில் நேற்று (20) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டிற்குத் தேவையான முட்டைகள் சந்தைக்கு வருவதில்லை.அதனால்தான் பெரும் அழுத்தத்தையும் மீறி முட்டையை இறக்குமதி செய்தோம்.

அரசு சேவையில் உள்ள சிலர் எடுக்கும் முடிவுகள் மக்களுக்கு சாதகமாக இல்லை.

எனவே, மக்களுக்கு தேவையான முடிவுகளை எடுக்கும்போது, அவை ​​தடையாக உள்ளன.

முட்டையை இறக்குமதி செய்ய முடியாது என்று கூறியதால், இறக்குமதி செய்தோம்.

முட்டை விலை குறையும் என்று நாம் கூறியதை இன்னும் இரண்டு வாரத்தில் செய்து தருவோம் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles