எதிர்வரும் 25 ஆம் திகதி ஆயிரத்து 320 பயிற்சி வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நியமனம் வழங்கப்படவுள்ளவர்களின் பெரும்பலானோர் கிராமிய வைத்தியசாலைகளின் வெற்றிடங்களை பூர்த்தி செய்யவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டினுள் தற்போது 19 ஆயிரம் வைத்தியர்கள் சேவையாற்றுகின்றனர்.
புதிய நியமன வழங்கலுடன் அந்த எண்ணிக்கை 20 ஆயிரமாக அதிகரிக்கும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் வருடாந்தம் வைத்திய கல்லூரிக்காக ஆயிரத்து 800 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.
அந்த எண்ணிக்கையை ஐயாயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.