பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளை புறக்கணிக்கும் ஆசிரியர்களை கருத்திற் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) அறிக்கையின் படி,
ஆசிரியர்கள் அடுத்த வாரத்திற்குள் உயர் தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கு திரும்ப மறுத்தால், அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ், கல்வி அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும்.
மாணவர்களின் கல்வியை பணயக் கைதிகளாக ஆக்குவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இன்று (19) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கல்வி அமைச்சின் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.