ரயில்வே திணைக்களத்தை பொது நிறுவனமாக மாற்றுவதற்கான கலந்துரையாடல்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மீளமைக்கும் திட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் ஒருவரை கோடிட்டு தேசிய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
ஒரு பொது நிறுவனம் அல்லது ஒரு சட்டப்பூர்வ நிறுவனம் வணிக அடிப்படையில் இயக்கப்படுகிறது அல்லது தலைவர் மற்றும் இயக்குநர் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.
திணைக்களம் என்பது வணிக குணங்களைக் கொண்டிருக்கவில்லை மற்றும் நேரடியாக அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
இந்தநிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நிதி உதவிக்கு தகுதி பெற சர்வதேச நாணய நிதியத்தால் இந்த சீர்த்திருத்தம் பரிந்துரைக்கப்படுகிறது என்றும் அந்த அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.