அலவத்துகொட பகுதியில் புகைப்படக் கூடம் ஒன்றில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அங்கு போலி நாணயத்தாள்கள் அச்சிடப் பயன்படுத்தப்பட்ட கணினிகள் உட்பட பல உபகரணங்களையும், அச்சிடப்பட்ட 43 போலி ஐயாயிரம் ரூபா நோட்டுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த பண்டிகைக் காலத்தில் பொருட்களை வாங்கிவிட்டு 5000 ரூபா நோட்டுகளை மாற்றிக் கொண்டிருந்த நபர் ஒருவரைப் பற்றி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபரை சோதனையிட்ட போது அவரிடம் இருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து சந்தேக நபர் 5000 ரூபா நோட்டுக்களை மாற்றும் தரகர் என்பது தெரியவந்துள்ளதுடன், அவரிடம் இருந்து மேலும் 40 போலி ஐயாயிரம் ரூபா நோட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த தரகரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்படி புகைப்படக் கூடத்தில் சோதனை நடத்திய பொலிஸார், சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று (20) கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.