Tuesday, December 23, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேசிய கண் வைத்தியசாலையின் சகல அறுவை சிகிச்சைகளும் இடைநிறுத்தம்

தேசிய கண் வைத்தியசாலையின் சகல அறுவை சிகிச்சைகளும் இடைநிறுத்தம்

தேசிய கண் வைத்தியசாலையின் சகல அறுவை சிகிச்சைகளும் நேற்று (19) முதல் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவியதன் காரணமாக இவ்வாறு சிகிச்சைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் ஏ.ஆர்.எம். தௌபிக் குறிப்பிட்டார்.

அறுவை சிகிச்சை அறையில் கிருமிகள் பரவுவதை துரிதமாக அகற்றி வழமை நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் மீளத் திறப்பது தொடர்பில குறிப்பிட்ட திகதியை அறிவிக்க முடியாது எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பில், அறுவை சிகிச்சை அறைக்குள் கிருமிகள் எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் சுகாதார அமைச்சினால் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles